ரஜினியும், கமலும் சினிமாவையும் தாண்டி நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், ரஜினி ஆன்மீகம், அமைதி என தனக்கென்று தனி வழியை பின்பற்றுகிறார். ஆனால், கமலோ நாத்திகவாதி. இப்படி இவர்களுக்குள் முரண்பட்டு கிடந்தாலும் பொது இடங்களில் இருவருமே நண்பர்களாகத்தான் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

தற்போது கமல் அரசியல் களத்தில் இறங்க தீவிரமாக பணியாற்றி வருகிறார். பல்வேறு முக்கிய தலைவர்களிடம் கட்சி தொடங்குவது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறார். ஆனால், ரஜினியோ அரசியலுக்கு வருவது பற்றி மறைமுகமாக சொன்னாலும், அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமலேயே இருந்து வருகிறார். இந்நிலையில், ரஜினியுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவது அருவருப்பாக இருப்பதாக கமல் ஆவேசப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். ரஜினி ஒரு பாதையில் செல்பவர், நான் வேறு பாதையில் செல்பவன். என்னையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவது அருவருக்கத்தக்கது. நான் அரசியல் களம் இறங்கப் போகிறேன் என்று அவரிடம் தெரிவித்து விட்டேன். என்னுடைய கட்சியில் இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் திறமையானவர்களுக்கும் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும். நான் ஆரம்பிக்கும் கட்சிக்கு ஆம் ஆத்மி கட்சி போல் மக்களிடமிருந்து நிதி திரட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.