2.0 படத்தில் வில்லனாக நடிக்க முதலில் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் 2.0 திரைப்படம் கடந்த 29ம் தேதி உலகம் முழுவதும் 10 ஆயிரம் தியேட்டர்கள் வெளியனது. இப்படம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது. திரையிட்ட இடமெங்கும் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

குறிப்பாக இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்‌ஷய்குமாரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. செல்போன்களால் பறவைகள் சாகின்றன எனக்கண்டுபிடித்து, அதை தடுக்க முடியாமல் தற்கொலை செய்து, அதன் பின் அவரின் ஆவி பொதுமக்களை பழிவாங்கும் பக்‌ஷிராஜா கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். ரஜினிக்கு இணையாக அவரின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வேடத்தில் நடிக்க முதலில் ஷங்கர் கமல்ஹாசனைத்தான் அணுகினாராம். கதையை கேட்டபின் நடிக்க சம்மதித்த கமல், இப்படத்தில் நான் நடிக்க வேண்டுமானால் ரஜினியின் சம்பளத்தை விட எனக்கு அதிகமாக கொடுக்க வேண்டும் எனக்கூறினாராம். அதன்பின்பே அக்‌ஷய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டாராம்.

கமல்ஹாசன் மட்டும் இப்படத்தில் நடித்திருந்தால் கமல்-ரஜினி என ரசிகர்களுக்கு 2.0 கொண்டாட்டமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.