பிரிக்க முடியாதது எதுவோ என கேட்டால் கமலஹாசனும் சர்ச்சையும் என கூறலாம்

அந்த அளவுக்கு அவரின் சண்டியர் படம் காலம் தொட்டு பிரச்சினையாகி வருகிறது. சண்டியர் என்ற படப்பெயர் திரு கிருஷ்ணசாமியின் எதிர்ப்பால் விருமாண்டி ஆனது.

விஸ்வரூபம் படத்திற்க்கு இஸ்லாமிய ரீதியாக எதிர்ந்த எதிர்ப்பு அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து நடத்தி வரும் கமலஹாசன்

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சி கலாச்சார சீரழிவை விதைப்பதாக இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் எனவும் கமலஹாசனுக்கு எதிராகவும் இந்து மக்கள் கட்சி பேசி வருகிறது.

சென்ற பிக்பாஸ் சீசன் 1லேயே சொன்னோம் நிறுத்தவில்லை இம்முறை நிகழ்ச்சியை நிறுத்த வைப்போம் என்கிறது இந்து மக்கள் கட்சி.