விஜய் தொலைக்காட்சியில் வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன்வை கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. உலக நாயகன் கமல் பிக்பாஸ் சீசன் 2வின் டீசரை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு வெற்றி நடை போட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பிரபலம் அடைந்தார்கள். வையாபுரி, கஞ்சா கருப்பு, ஒவியா உள்ளிட்டவர்களுக்கு மீண்டும் படவாய்ப்பு கிடைக்க பெற்று நடித்து வருகின்றனர். இதனால் இரண்டாம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. பிக்பாஸ் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. இரண்டாம் பாகத்தை தொகுத்து வழங்க போவது கமல் தான் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியது.

பிக்பாஸ் பாஸ் இரண்டாம் பாகத்திற்கான புரோமோ வீடியோ படப்பிடிப்பு ஏவிஎம் அரங்கில் நடைபெற்றது. ஜூன் மாதம் ஆரம்பம் ஆக உள்ள பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியானது விறுவிறுப்பாகவும், காராசாரமாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் சீசன் 2 டீசரை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தனது ட்விட்டர் வலைத்தளத்தில் என் மக்களை சந்திக்க வருகிறேன் என்றும், உங்கள் நான் என்றும் பதிவிட்டுள்ளார்.