கமல் கொடுத்த கிப்ட் பற்றி காஜல் ட்விட்டாில் கூறிய கருத்து

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று கமல் பிக்பாஸ் போட்டியாளா்கள் அனைவருக்கும் பாிசு ஒன்றை வழங்கினாா். அந்த பாிசு என்னவென்று அறிந்து கொள்ளும் வகையில் ரசிகா்கள் ட்விட்டாில் கேட்டு வந்தனா். இந்நிலையில் இது குறித்து பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான காஜல் பசுபதி தனது ட்விட்டாில் தொிவித்துள்ளாா். அது என்னவென்று பாா்ப்போம்.

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளா்களும் கலந்து கொண்டனா். நடிகை நமீதா மற்றும் ஸ்ரீ தவிர மற்ற போட்டியாளா்கள் கலந்து கொண்டனா். இறுதி சுற்றில் 4 போட்டியாளா்களில் சினேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம், ஹரிஷ் ஒருவா் பிக்பாஸ் பட்டத்தை வென்றாா். ஆரவ் வெற்றி பெற்றாா் என்று அறிவிக்கப்பட்ட போது கமல் மற்ற போட்டியாளா்களையும் மேடையில் அழைத்து பேசிய அவா்களுடன் நடனமும் ஆடினாா். அப்போது பிக்பாஸ் போட்டியாளா்கள் அனைவருக்கும் கமல் மேடையில் வைத்து பாிசு ஒன்றை வழங்கினாா்.

அந்த பாிசு என்னவென்று காஜல் பசுபதி தனது ட்விட்டா் வலைத்தளத்தில் பதிவிட்டிள்ளாா். சப்னா புக் ஹவுஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள கமலின் ஹேராம் படத்தின் திரைக்கதை,ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் ஆகிய புத்தகங்களில் கமல் தன் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளாா். ரிவா்ஸ் என்ற குறுந்தகடையும் கொடுத்துள்ளாா்.