தேர்தல் என்றால் நடிகர் கமல்ஹாசனுக்கு பயம். எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடப்போவதில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் பேசியுள்ளார்.

முன்னதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வரவுள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுமா என கேள்வி எழுந்தது. இதற்கு மதுரை விமானநிலையத்தில் பதில் அளித்த கமல், தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. ஆனால் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டும் வேலையில் மக்கள் நீதி மய்யம் ஈடுபடும் என்றார்.

இந்நிலையில் சென்னை விமானநிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ஜெயகுமார் பேசினார். நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடுவோம் என்று சொன்னால் அது விஷயம். போட்டியிடவில்லை என்று சொன்னால் விஷயமே இல்லை. தேர்தல் என்றால் கமல்ஹாசனுக்கு பயம். எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடப்போவதில்லை என்றார் அதிரடியாக.