கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை பார்வையிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

 

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, பட்டுக்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. மக்கள் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பலர் உணவின்றி, தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். தமிழகமெங்குமிலிருந்து டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாக பார்வையிட நடிகரும்,மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் ஆன கமல்ஹாசன் சுமார் 60 லட்சம் மதிப்பிலான நிவாரணத்தை வழங்கினார்.மேலும் பாதிக்கப்பட்ட பிற மாவட்டங்களுக்கு 1.20 கோடி நிவாரண உதவிகளை செய்துள்ளார்.