நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் அன்றைய தினம் அவருடைய முழு சுற்றுப்பயண விபரம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி காலை 7 மணிக்கு முன்னாள் குடியரசு தலைவர் இல்லத்தில் தொடங்கும் அவரது நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு மதுரை வரை தொடர்கிறது. இந்த முழு விபரங்களை தற்போது பார்ப்போம்

காலை 7.45 மணி: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இல்லத்துக்கு வருகிறார்

காலை 8.15 மணி: கணேஷ் மஹாலில் மீனவர்களை சந்திக்கின்றார்

காலை 11.00 மணி: அப்துல்கலாம் அவர்களின் நினைவிடம் செல்கிறார்

காலை 12.30 மணி: ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயிலில் பொதுக்கூட்டம்

பிற்பகல் 2.30 மணி: பரமக்குடி ஐந்துமுனை சாலையில் லேனா மஹாலுக்கு முன் பொதுக்கூட்டம்

பிற்பகல் 3.00 மணி: மானாமதுரையில் ஸ்ரீபிரியா தியேட்டர் அருகே பொதுக்கூட்டம்

பிற்பகல் 5.00 மணி: மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் வருகிறார்

மாலை 6.00 மணி: அரசியல் கட்சி கொடி ஏற்றுகிறார்

மாலை 6.30 மணி: மதுரையில் பொதுக்கூட்டம்

இரவு 8.10 முதல் 9 மணி வரை பொதுக்கூட்டத்தில் உரை