என் தம்பி விஜய் விருது வாங்குவது எனக்கு மிக மகிழ்ச்சி: கமல்ஹாசன்

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை சமீபத்தில் விகடன் அறிவித்தது. இந்த விருது விழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விருது வழங்கும் விழாவில் விகடன் விருதினை நடிகர் விஜய்க்கு நடிகர் கமல்ஹாசன் வழங்கினார். இந்த விருதினை வழங்கிய பின்னர் கமல்ஹாசன் கூறியபோது, ‘தம்பி விஜய்க்கு இது முதல் விருதும் இல்ல இதோட நிக்கபோறதும் இல்ல. பல கலைஞர்கள் விருது வாங்கும் மேடையில் என் தம்பியும் விருது வாங்குவது மிக மகிழ்ச்சி என்று கூறினார்.

மேலும் இதே மேடையில் வரும் 26ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாகவும், சுற்றுப்பயண விபரங்களை வரும் 18ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும் கமல்ஹாசன் அறிவித்தார்.