மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் ,நடிகருமான கமல்ஹாசனை பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கமல்ஹாசன் தொடர்ந்து நேரில் சென்று பார்வையிட்டு வந்தார். பல கிராமங்களுக்கும் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை கொடுத்து ஆறுதல் கூறினார்.மத்திய,மாநில அரசுகள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நிவாரண உதவிகள் எல்லா மக்களுக்கும் சென்றடையவில்லை,பா.ஜ.க அரசு தமிழக மக்களின் உணர்வுக்கு சற்றும் செவி சாய்க்கவில்லை என்று பேட்டியில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  ஊழலுக்கு எதிரானவர்கள் யாருமே எனக்கு உறவினர்கள்தான்: கெஜ்ரிவாலுடனான சந்திப்புக்கு பிறகு கமல் பேட்டி

இந்நிலையில் சென்னை கொருக்குப்பேட்டையில், பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அக்கட்சியின் செயலாளர் ஹெச்.ராஜா கூறியதாவது,கஜா புயல் பாதிப்பின் போது நானும், பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நேரில் சென்று மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தோம்.மத்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்ய தயாராக உள்ளது என்றார்.

இதையும் படிங்க பாஸ்-  இப்படியே செஞ்சிட்டு இருந்தால் அடிதடியில் தான் போய் முடியும்: ஐஸ்வர்யாவை எச்சரிக்கும் மகத்

பின் கமல் பா.ஜ.க அரசு குறித்து கூறிய கருத்துக்கு பதிலளித்த ஹெச்.ராஜா, 30 வருடங்களாக தமிழக மக்களை சினிமா மோகத்தில் ஆழ்த்திய கமலுக்கு பா.ஜ.க அரசை விமர்சிக்க தகுதி இல்லை என்று கூறினார்.

ஹெச்.ராஜா வின் இந்த கருத்துக்கு கமலின் ரசிகர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்