தலைவன் இருக்கிறான்

தற்போதைய அரசியல் பரபரப்புக்கிடையே தலைவன் இருக்கிறான் படத்தை துவங்க உள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் தற்போத்து விஸ்வரூபம்2 படத்தின் இறுதிகட்ட பணிகளில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சபாஷ் நாயுடு படப்பிடிப்பும் விரைவில் துவங்க உள்ளதாம். இந்த நிலையில் கமல்ஹாசன் புதிய படம் குறித்து தaகவல்கள் வெளிவருகின்றன. தலைவன் இருக்கிறான் என்ற தலைப்பில் அடுத்த படத்தை அவர் துவங்க உள்ளாராம். அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாம்.

ஏற்கெனவே கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்க, தலைவன் இருக்கிறான் படத் தலைப்பு அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.