ஷங்கரின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மேலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘இந்தியன்’. இப்படத்தில் உலக நாயகன் இரு வேடங்களில் நடித்திருந்தார்.இப்படம் சூப்பர் ஹிட்டானது.இந்நிலையில் 22 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் 2-ஆம் பாகம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்றது.

பின்னர் கமலின் மேக்கப் சரியில்லை என்று கூறி சில தினங்களுக்கு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் கமல் ஹாசன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தன் கட்சி ’மக்கள் நீதி மய்யம்’ தனித்து போட்டியிட போவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது அவர் தேர்தல் வேலைகளில் பிசியாக உள்ளதால் படபிடிப்பில் கலந்து கொள்ள முடியாது என்று ஷங்கரிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. எனவே தேர்தல் முடியும் வரை படபிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இப்படத்தை லைக்கா நிறூவனம் தயாரித்து வருகிறது. ராக் ஸ்டார்  அனிருத் இப்படத்திற்கு இசையமைகிறார். மேலும் இந்தியன் 2 வில் கமலுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.