தமிழ்நாட்டில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் அரசியல்வாதிகளுள் ஒருவரான கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் மிக நீண்ட, நெடிய அரசியல் சுற்றுப்பயத்தை தொடர்ந்துள்ளார். அதோடு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்நிலையில், ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க தயாராகவுள்ள ‘இந்தியன் 2’ படமானது டிசம்பர் மாத பாதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இப்படத்தினைத் தொடர்ந்து ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்து மெகா ஹிட்டான ‘தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  தினசரி பத்து லட்சம்: பேரம் பேசுகிறாரா ஓவியா?

இந்த சூழலில், கமல் நடிக்கவுள்ள ‘தேவர் மகன் 2’ படத்தின் தலைப்பானது சாதி பெயரைக் கொண்டுள்ளது என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு விளக்கமளித்த கமல், இப்படமானது முதல்பாகத்தின் தொடர்ச்சி அல்லது ரீமேக் செய்யப்பட்டுள்ளது என மக்கள் எளிதில் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே இத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  நல்லவர் துணை நின்றால்... ரஜினிக்கு அழைப்பு விடும் கமல்ஹாசன்

மேலும், உலகநாயகன் கூறுகையில், ‘தேவர் மகன் 2’ படத்தின் தலைப்பு கிடையாது எனவும், இதில் எந்தவித  உள்நோக்கமும் தனக்கு கிடையாது எனவும், படத்தின் தலைப்பு குறித்து புதிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.