நடிகர் கமலஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான படம்’ விஸ்வரூபம் 2′. இதனைத் தொடர்ந்து, இந்தியன் 2 மற்றும் சந்திர நாயுடு
ஆகிய இருபடங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க கமல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1992-ஆம் ஆண்டு கமல்
நடிப்பில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, மெகா ஹிட்டான ‘தேவர் மகன்’ படம்தான்.

இதையும் படிங்க பாஸ்-  வேடிக்கை பார்க்கின்றது மத்திய அரசு: ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து ரஜினியின் டுவீட்

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில்தான் கமல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தேவர் மகன்’ படத்தை பரதன் இயக்கயிருந்தார்.மேலும், இளையராஜா இசையமைத்தார். இப்படத்தில் சிவாஜி கணேசன், நாசர்,
கௌதமி, ரேவதி, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினிக்கு இரவில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்

இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. ஹிந்தி மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெகுவிரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையில், ‌ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தோடு ‘தேவர் மகன் 2’ படப்பிடிப்பையும்
தொடங்குவார் என்றும் பேசப்படுகிறது.