கமல் அரசியல் கால் வைத்து தனது கட்சி கொடி, பெயர், சின்னம் ஆகியவற்றை மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அறிவித்தார். இதற்கிடையில் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். விஸ்வரூபம் 2 இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குநா் ஷங்கருடன் இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளார் கமல். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கயுள்ளது.

ரஜினியும் அரசியலுக்கு வருவதாக அறிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ரஜினி மாவட்ட வாரியாக தொண்டா்களை சந்தித்து வந்தார். கமலும் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்படி ரஜினியும்,கமலும் அரசியல் பணிகளுக்கிடையில் படங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றனா். இவா்கள் நடிக்கும் படங்களில் அரசியல் கட்டாயமாக இருக்கும் என பேச படுகிறது. ரஜினியின் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் ஷங்கா் கமல் கூட்டணி இந்தியன் 2 வில் இணைந்துள்ளது. இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் ஆரம்பமாகிள்ளது.