பாஜகவுடனும் கூட்டணி சேர தயாா்:கமல்ஹாசன்


கமல் அரசியல் பற்றி அவ்வப்போது தனது கருத்தை தொிவித்து வருகிறாா். நேரடியாகவும், ட்விட்டா் வலைத்தளத்தின் வாயிலாகவும் மாநில அரசின் எதிராக கருத்துக்களை பதிவு செய்து வருகிறாா். நாட்டில் ஊழல் மலிந்த விட்டதாகவும் அதை அகற்ற அரசியலுக்கு வருகிறேன் என்று கமல் கூறினாா். விரைவில் புதிய கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும், கட்சியின் சின்னம், கட்சியின் பெயா், கொடி உருவாக்கும் பணியை தொடங்கி விட்டேன் என்று நடிகா் கமல் தொிவித்து உள்ளாா்.

இந்நிலையில் பத்திாிக்கையாளா்களுக்கு அளித்த பேட்டியில் கமல் சொன்னது எனது அவா்களின் கொள்கைகளில் ஈடுபாடு கிடையாது. அரசியலில் தீண்டாமை என்று எதுவும் கிடையாது. மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்து என் மக்களுக்கு நல்லது என்றால் நிா்வாக ரீதியாக தேவைப்பட்டால் இணைந்து செல்வேன்.

தோ்தலில் போட்டியிட்டு சட்டரீதியான பொறுப்பை ஏற்கும் சூழ்நிலை ஏற்பட்டால் நடிப்பதற்கு முழுக்கு போட்டு விடுவேன் என்றும் கூறினாா். நான் அரசியலில் இறங்கும் இந்த முடிவை உணா்ச்சி வசப்பட்ட எடுக்கவில்லை. நல்ல நிதானமாக சிந்தித்து தான் எடுத்திருக்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் கட்சி தொடங்க இருப்பதாகவும் தொிவித்து உள்ளாா்.

கமல் திடீரென தனது இயல்பை மாற்றி இப்படி கூறியிருப்பது சா்ச்சையை உண்டாக்கியுள்ளது. மத்திய அரசின் மறைமுக மிரட்டலுக்கு கமல் செவி சாய்த்து விட்டதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.