விஸ்வரூபம் படம் மூலம் ரூ.60 கோடி நஷ்டம் – கமல்ஹாசன் ஓபன் டாக்

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்து வெளியான படம் விஸ்வரூபம். இப்படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான பல காட்சிகள் இருப்பதாகவும், இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பல முஸ்லீம் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

எனவே இப்படத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனால், கமல்ஹாசன் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார். அதன் பின் நீதிமன்றத்தில் முறையிட்டு, ஒரு வழியாக தடை விலக்கப்பட்டது.

இதுபற்றி சமீபத்தில் பேட்டியளித்த கமல்ஹாசன் “ விஸ்வரூபம் படம் மூலம் எனக்கு ரூ.60 கோடி நஷ்டம் ஏற்பட்டது. நீதிமன்றம் தடையை விலக்கிய பின்பும் தமிழக அரசு தடை விதித்தது. மக்களின் ஆதரவு பெருகியதால் அந்த தடை விலக்கப்பட்டது. அந்த சமயத்தில் என் நிதிநிலைமை மிகவும் பாதிக்கப்பட்டது. அதைத்தான் அவர்களும் விரும்பினார்கள். என் சொத்துக்கள் முழுவதும் அடமானம் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.எப்போதும் வரி ஏய்ப்பு செய்யத எனக்கு ரூ.60 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

நம் நாட்டில் எல்லோருக்கும் அம்னீஷியா எனும் மறதி நோய் இருக்கிறது. ஊழல் புரையோடிக் கிடக்கும் சமூகத்தில், எனக்கு நேர்ந்த அனைத்தும் மறக்கப்படும். இதில் நான் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள்தான் என்னை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்” என கமல்ஹாசன் கூறினார்.