கமல் நடிப்பில் பல்வேறு பிரச்சினைகளுடன் வெளிவந்து வெற்றிநடை போட்ட ‘விஸ்வரூபம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூஜா குமார். அதன்பிறகு கமல் நடிப்பில் வெளிவந்த ‘உத்தம வில்லன்’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு, பிரபுவுடன் ‘மீன் குழம்பும் மண்பானையும்’ என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது தமிழில் இவருடைய நடிப்பில் ‘விஸ்வரூபம்-2’ படம் மட்டுமே ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. மற்றபடி, தெலுங்கில் டாக்டர் ராஜசேகருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பூஜாகுமார் பிகினி உடையணிந்து போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பூஜா குமாருக்கு தற்போது 40 வயது ஆகும். 40 வயதிலும் இளமை மாறாமல் பிகினி உடையில் போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது எனலாம்.