97ம் ஆண்டு வெளிவந்தது ராசி திரைப்படம் அஜீத்குமார்,ரம்பா நடிக்க நல்ல செட்டிநாட்டு கிராமத்து மண்வாசனையில் வந்து வெற்றி பெற்றது. காரைக்குடி உள்ளிட்ட செட்டிநாடுகளை சிறப்பாக காண்பித்ததில் இந்த படம் முக்கிய பங்கு வகித்தது.

இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் முரளி அப்பாஸ் அவர்கள்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு அறிந்தும் அறியாமலும் பட நாயகன் நவ்தீப் நடிக்க சொல்ல சொல்ல இனிக்குதடா என்ற திரைப்படத்தை இயக்கினார் இப்போதும் படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.

தற்போது கமலஹாசனின் கட்சியான மய்யத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பதோடு டிவி, விவாதங்களில் கட்சி சார்பாக பங்கேற்பது வரை பல முக்கிய வேலைகளை செய்து வருகிறார்.

இவர் இயக்குனர் என்பதால் கட்சியின் மீடியா சம்பந்தமான பெரும்பாலான பொறுப்புகள் குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் சின்ன சின்ன குறும்படங்கள், செய்திப்படங்களை இயக்கி அதன் மூலம் மக்களை கவரும் முக்கிய பொறுப்பை கமல் இவரிடம் ஒப்படைக்க நினைக்கிறாராம்.