கமல்ஹாசனுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

கமல்ஹாசன் நடித்து ஷங்கர் இயக்கிய இந்தியன் என்ற மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் விரிவில் துவங்கப்பட உள்ளது. ரஜினியின் 2.0 படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளில் ஈடுபட்டுவரும் ஷங்கர், இதையடுத்து இப்படத்திற்கு கவனம் செலுத்த உள்ளார். தற்போது இப்படத்தின் கதாநாயகிக்கான தேடல் நடந்துவந்தது. இதில் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வடிவேலுவும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இசைக்கு அனிருத் தேர்வு செய்துள்ளதாகவும் தெரிகிறது.