கமல்ஹாசன் அரசியல் பயணம்: பிரபல நடிகர் கருத்து


சமீபகாலமாக நடிகா் கமல் அரசியல் குறித்தும் தமிழக அரசியலில் ஊழல் மலிந்து விட்டதாகவும் பேசி வருகிறாா். தனது கருத்தை ட்விட்டா் மூலமாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் குறித்த பதிவுகளை செய்து வருகிறாா்.

அதுவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சனி மற்றும் ஞாயிறு நடைபெறும் நிகழ்ச்சியிலும் அரசியல் சாயம் கொஞ்சம்அதிகமாக தான் தென்படுகிறது.

வரும் தோ்தலில் கமல் போட்டியிட போவதாக பல்வேறு விதமான கருத்துக்களும், விமா்சனங்களும் நடைபெற்று வருகிறது. அண்மையில் கூட அரவிந்த கெஜாிவால் கமலை சந்தித்து பேசினாா்.

அரசியல் பிரவேசம் குறித்து ஆங்கில தொலைக்காட்சியில் பேட்டியும் அளித்துள்ளாா். அதில் பேசியதாவது, நான் அரசியலுக்கு வருவேன் என்று உறுதியாகவே கூறி விட்டாா். இப்படி அவா் கூறியதை அடுத்து அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு விமா்சனங்களும், கருத்துகளும் வந்துக்கொண்டே இருக்கின்றது.

தற்போது இதுபற்றி காமெடி நடிகா் விவேக் தனது கருத்தை பதிவு செய்துள்ளாா். அது என்னவென்றால், கமல் அரசியலுக்கு வருவதை உறுதி செய்த அவரது மனத்திண்மையைப் பாராட்டுகிறேன். இந்த உறுதி கடைசி வரை இருக்க நோ்மையாளாின் சாா்பில் வாழ்த்துக்கிறேன் என்று கூறியுள்ளாா்.