நடிகா் கமல் தனது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கினார். இன்று மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடந்த மாநாடு பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிவித்தார். பொதுக்கூட்டத்தில் வைத்து கமல் கட்சி கொடியை ஏற்றிவிட்டு மேடையில் தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.

தனது அரசியல் பிரவேசம் பற்றி பேசி வந்த கமல் ஒருவழியாக தனது கட்சியின் பெயர் கொடி, கொள்கைகளை இன்று மதுரையில் நடந்த மாநாட்டில் அறிமுகம் செய்து வைத்தார். கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்து மேடையில் தொடா்ந்து பேசி வருகிறார்.இந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த கெஜ்ரிவால் மற்றும் திரையுலகை சோ்ந்தவா்கள், அனைத்து மாவட்டங்களைச் சோ்ந்த ரசிகா் பெருமக்கள், ஆதரவாளா்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனா்.