ஒரே கட்சியில் ரஜினி, கமல், அஜித், விஜய்: எஸ்.வி.சேகர் ஆலோசனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் ஆகிய இருவருமே விரைவில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. விஜய்க்கும் அரசியல் கனவு வெகுநாட்களாக உள்ளது. அஜித்துக்கு அரசியலில்விருப்பம் இல்லை என்றாலும் ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினியும் கமலும் இணைந்து கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றும் அந்த கட்சிக்கு அஜித், விஜய் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். மேலும் அவர் இதுகுறித்து கூறியதாவது: ‘ரஜினிகாந்த் தனியாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும். அதில் கமல் இணைய வேண்டும். ரஜினி முதல்வராகவும், கமல் துணை முதல்வராகவும் இருக்க வேண்டும். இந்த கட்சியில் அஜித், விஜய் இணைந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

மேலும் சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று ஒருசிலர் கூறி வரும் நிலையில் சினிமா நடிகர்களாலும் சிறப்பான ஆட்சியை தர முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். யார் அரசியலுக்கு வரவேண்டும், யார் வரக்கூடாது என்று முடிவு செய்வது மக்கள் தானே தவிர அதை அரசியல் கட்சி தலைவர்களும் மாவட்ட செயலாளர்களும் தீர்மானிக்க முடியாது’ என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.