நடிகர் கமல்ஹாசன் இம்மாதம் 21ஆம் தேதி அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதால் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் முழுநேர அரசியலில் ஈடுபட போவதாகவும் செய்திகள் வெளிவந்தது

இந்திய சினிமாவில் கமல்ஹாசன் இல்லாததை நினைத்து கூட பார்க்க முடியாது என்று அவரது ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

இந்த நிலையில் அரசியலில் ஈடுபடுவதால் சினிமாவில் இனி நடிக்கப்போவதில்லை என வெளியான தகவலுக்கு கமல் மறுப்பு தெரிவித்துள்ளார். விஸ்வரூபம் 2, இந்தியன் 2, சபாஷ் நாயுடு படங்களுக்கும் பின்னரும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது