என்னைக் கைது செய்தால் தேவையில்லாமல் பதற்றம் அதிகமாகும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சியில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன்  ’உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் அவரது கொலைக்கு கேள்வி  கேட்க வந்துள்ளேன். இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு’ என்று  கூறினார். கமலின் இந்தப் பேச்சுக்கு பாராட்டுகள் கிடைத்த அதே அளவுக்கு எதிர்ப்புகளும் கிளம்பின.

இதையும் படிங்க பாஸ்-  அய்யோ பாவம் சிக்கிட்டாரே? - வையாபுரி...பொன்னம்பலம் வரிசையில் அடுத்த பிக்பாஸ் நடிகர்

பாஜக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர்கள் தங்கள் எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்தனர். அதேபோல கமல் கூட்டத்தில் செருப்பு வீச்சு மற்றும் முட்டை வீச்சு போன்ற அநாகரிகமான சம்பவங்களும் நடந்தன. இதையடுத்து கமல் மீது பாஜக தரப்பில் புகார்களும் கொடுக்கப்பட்டன. இதனால் கமல் கைது செய்யப்படலாமோ என்ற அச்சம் எழுந்தது.

இதையும் படிங்க பாஸ்-  பிக்பாஸ் சீசன் 3 - கமல்ஹாசன் கொடுத்த பலே ஐடியா

இது குறித்து இன்று சென்னை விமான நிலையத்தில் கமலிடம் கேள்வி கேட்கப்பட்ட போது ‘என்னைக் கைது செய்தால் பதற்றம்தான் அதிகமாகும். இது வேண்டுகோள் அல்ல; அறிவுரை.’ எனத் தெரிவித்தார். மேலும் கோட்சே குறித்து தாம் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்தார்.