சர்கார் பட விவகாரத்திற்கு விஜய்க்கு ஆதரவாகவும் ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தும் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்தை பதிவிட்டுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி இருக்கும் ‘சர்கார்’  திரைப்படத்தில் ஆளும் அதிமுகவை விமர்சிக்கும் வகையில் பல வசனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கொதித்து போன அமைச்சர்கள் பலர் விஜய், இயக்குனர் முருகதாஸ் மீது வழக்கு தொடரப்படும் என கூறியுள்ளனர்.

மேலும் பல இடங்களில்அதிமுகவினர் சர்கார் படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சிலர் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை கிழித்து ரௌடி தனம் பண்ணி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மெர்சல் படத்திற்கு விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது போல தற்பொழுதும் சர்கார் படத்திற்கு ஆதரவாக தனது டிவிட்டர் பக்கத்தில் முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும் என குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கனவே கமலை கடுமையாக விமர்சித்து வரும் அதிமுக அமைச்சர்கள், கமலின் இந்த செயலுக்கு என்ன மாதிரி எதிர்வினை ஆற்றப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.