Connect with us

தமிழகம்

ரஜினியை சிதைக்கும் கமல்: தமிழருவி மணியன் காட்டம்!

Published

on

ரஜினிகாந்தின் அரசியல் வருகையை ஆதரித்து அவருக்கு பக்கபலமாக இருந்து வருபவர்களில் முக்கியமானவர் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன். இவர் நடிகர் கமல்ஹாசனுக்கு தனது அறிக்கை மூலம் காட்டமான பதிலடி ஒன்றை கூறியுள்ளார்.

ரஜினியின் அரசியல் வருகையையொட்டி பொதுக்கூட்டங்களை நடத்தி மக்களை ஒன்றுகூட்டி அச்சாரம் போட்டவர் தமிழருவி மணியன். இந்நிலையில் அவர் நடிகர் கமலுக்கு பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக நடிகர் ரஜினி தூத்துக்குடி சம்பவம் குறித்து பேட்டியளித்த போது, போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டனர் என்றும், எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

ரஜினியின் இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன் பல தலைவர்கள் ரஜினியின் இந்த கருத்து கண்டனம் தெரிவித்தனர். அதே நேரத்தில் ரஜினியின் இந்த கருத்துக்கு பதிலளித்த நடிகர் கமல், போராடுபவர்கள் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான். போராட்டங்களை நிறுத்தக் கூடாது. ரஜினி கூறியது அவரது கருத்து. நான் மக்கள் பிரதிநிதியாகவே மக்கள் கருத்துக்களை பிரதிபலிக்கிறேன் என்றார்.

இதனையடுத்து ரஜினிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழருவி மணியன். அதில், மக்கள் போராட்டத்திற்கு எதிரானவர் ரஜினிகாந்த் என்பதைப் போன்ற ஒரு பிம்பத்தினை கமல்ஹாசனின் அறிக்கை தெளிவாகவே வெளிப்படுத்துகிறது. மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்துவரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்வர் கனவு கலைந்துவிடக் கூடும் என்று அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவர்களும், சில அமைப்புகளும், அவருடைய பிம்பத்தைத் திட்டமிட்டுச் சிதைக்க முற்படும் நேரத்தில், கமல்ஹாசனும் மறைமுகமாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் நோக்கத்தை மக்கள் எளிதாக இனம்காணலாம்.

ரஜினிகாந்த், மக்கள் நலன் சார்ந்த எந்தப் போராட்டத்திற்கும் எதிரி அல்ல. மக்களால் வளர்த்தெடுக்கப்படும் வாழ்வாதாரப் போராட்டங்களில் வன்முறையாளர்கள் இடம் பெறக் கூடாது என்பதுதான் ரஜினியின் கவலையாக இருக்கிறது. ரஜினி சொந்தக் கருத்தைச் சொல்லி இருப்பதாகவும், மக்கள் கருத்தையே தான் எப்போதும் முன்வைப்பதாகவும் கமல்ஹாசன் கூறியிருப்பதில், அவருடைய தனிப்பட்ட நோக்கம் தெளிவாகவே தெரிகிறது. சொந்தக் கருத்தை வெளிப்படுத்தும் துணிவுதான் ஓர் உயர்ந்த தலைமைக்குரிய நல் அடையாளம்.

ரஜினிகாந்த், காந்தியும் இல்லை; அம்பேத்கரும் இல்லை; பெரியாரும் இல்லை. ஆனால், எந்த ஆதாயத்திற்காகவும் ரஜினி தன் சொந்தக் கருத்தை மறைத்து, மக்கள் கருத்து என்ற போர்வையில் பதுங்குபவரில்லை சமூக வலைதளங்களிலும், சில காட்சி ஊடகங்களிலும் ரஜினிக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன்பிடிக்கப் பார்ப்பது வருந்தத்தக்கது என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

செய்திகள்16 hours ago

ஹோட்டல் ரூமில் போதை மருந்து தயாரிப்பு – தீ பரவிய விபரீதம் !

செய்திகள்16 hours ago

10 மணிநேரம்… 100 இளையராஜா பாடல்கள் – இடைவிடாத இசைமழையில் நனைத்த கலைஞன் !

செய்திகள்17 hours ago

தத்துப்பிள்ளைக்கு காசநோய் … கண்டுகொள்ளாத பெற்றோர் – கைகொடுத்த நண்பர்கள் !

செய்திகள்17 hours ago

’சரவணன் மீனாட்சி மைனாவுக்கு’ இரண்டாவது திருமணம் – காதலனுடன் நிச்சயதார்த்தம் !

செய்திகள்20 hours ago

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் – டைட்டில் வின்னர் இவரா ?

அரசியல்20 hours ago

கட்சியினருடன் மட்டன் பிரியாணி சாப்பிட்ட ஸ்டாலின் !

செய்திகள்20 hours ago

நடிகையையும், அவரது அம்மாவையும் படுக்கைக்கு அழைத்தது உண்மைதான்: ஒப்புக்கொண்ட பிரபல நடிகர்?

செய்திகள்21 hours ago

ஆண் குழந்தைக்காக 16 வயது சிறுமியை கணவருக்கு இரையாக்கிய மனைவி

nayanthara
செய்திகள்4 weeks ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்4 weeks ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்4 weeks ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

செய்திகள்3 weeks ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

actres ragavi
சின்னத்திரை3 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

செய்திகள்3 weeks ago

பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் !

valimai
செய்திகள்3 weeks ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்3 weeks ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

Trending