காலா திரைப்படம் கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கர்நாடகா முதல்வர் குமாரசாமியை சந்திக்க பெங்களூரு சென்றுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து மத்திய அரசிதழில் வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. இந்நிலையில் காவிரி நதிநீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் கமல்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் நேற்று பெங்களூர் சென்றார். அப்போது சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல் சினிமா தொடர்பாக கர்நாடகா முதல்வரை சந்திக்க செல்லவில்லை, காவிரி விவகாரம் குறித்து பேசுவதற்காக செல்கிறேன். மேலும் மக்களைப் பொறுத்தவரை போராட்டங்களை நிறுத்த மாட்டார்கள். அவர்களது போராட்டங்கள் தொடரவே செய்யும் என்றார்.