‘விஸ்வரூபம் 2’ படத்திற்காக கமல் எழுதிய பாடல்

உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் பணிகள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடந்த சில வாரங்களுக்கு பின்னர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக டப்பிங் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது ஒரு பாடலை ரிகார்டிங் செய்துள்ளதாக கமல் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் கிளைமாக்ஸில் இடம்பெறும் இந்த பாடலை ஜிப்ரான் கம்போஸ் செய்ய தானே எழுதியதாகவும், இந்த பாடலின் வரிகளை விரைவில் டுவிட்டரில் வெளியிட உள்ளதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பாடலின் இந்தி பதிப்பை பிரசூன் ஜோஷி எழுதியுள்ளதாகவும் வெகுவிரைவில் இந்த பாடலின் தெலுங்கு பதிப்பும் ரிகார்டிங் நடைபெறவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ‘தூங்காவனம்’ படத்திற்கு பின்னர் இன்னும் ஒரு கமல் படம் கூட வராததால் ஏங்கி போயிருக்கும் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்த ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.