முதல்வரை பாராட்டும் கமல்ஹாசன்?

ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயண சாமிக்கு நடிகர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுகை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரி அரசின் அனுமதி இன்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாதென பாண்டிச்சேரி முதல்வர் நாராயண சாமி தெரிவித்திருந்தார்.

இதை தொடந்து நடிகர் கமலஹாசன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் நாராயணசாமி தைரியமான முதல்வர் எனவும் இத்திட்டம் தொடர்பாக தெளிவான முடிவை எடுத்ததிற்கு தலைவணங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாடு மாணவர்கள் அமைதியான முறையில் தமிழ்நாட்டு விவசாயகளுக்கும், மக்களுக்கும் குரல் கொடுக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார்.