Kamalhaasan Election Compaign – நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் புது விதமான பிரச்சார யுக்திகளை கடைபிடித்து வருகிறார்.

அரசியல் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் அதற்கு மக்கள் நீதி மய்யம் என பெயர் வைத்ததோடு, வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் தனது கட்சி சார்பாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும், அவ்வப்போது வீடியோக்கள் மூலமும் மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  ஹெச்.ராஜா கிட்ட கேக்குற கேள்வியா இது? - உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா?

அந்த வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார் கமல். அதில் ஸ்டாலின், மோடி ஆகியோர் பேசுகின்றனர். அதற்கு இன்னும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களே என்பது போல் முகபாவனை காட்டும் அவர், நீங்கள் எல்லாம் ஆண்டி இண்டியன் என ஹெச்.ராஜா பேசுவதைக் கேட்டு ஆத்திரத்தில் ரிமோட்டை தூக்கி தொலைக்காட்சி மீது அடிக்கிறார். அது உடையும் சத்தம் கேட்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  விழுந்த தென்னை மரத்தை தூக்கவே ரூ.2000 அரசு தருவதோ ரூ.1100 - புலம்பும் விவசாயிகள்

அதன்பின்னும் அவர் என்ன பேசுகிறார் என்பதை வீடியோவில் கேளுங்கள்…