அரசியலில் களம் இறங்கிய பின் சினிமாவிற்கு முழுக்குப் போட இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாகவே, ஊழல் மற்றும் தமிழக அமைச்சர்களுக்கு எதிராக கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கம், ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்து வருகிறார். அதோடு, விரைவில் தான் அரசியலுக்கு வருவேன். அது மக்களுக்கான கட்சியாக இருக்கும். ஊழலை ஒழிப்பதுதான் முதல் வேலை எனக்கூறியுள்ளார்.

அதேபோல், அரசியலுக்கு வந்த பின் சினிமாவிலிருந்து விலகி விடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த செய்தி அவரின் தீவிர ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.