Bigg Boss season 3 – பிக்பாஸ் சீசன் ஹிட் அடிக்க கமல்ஹாசன் சில ஐடியாக்களை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 3வது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது.இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

எனவே, இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள்ளே யார் யார் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த முறை கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களில் பட்டியலும் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை மாபெரும் ஹிட் அடிக்க மற்ற மொழிகளை போல இந்நிகழ்ச்சியில் திருநங்கைகளை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பலாம் என கமல்ஹாசன் சில ஐடியாக்களை கொடுத்துள்ளார். அதன்பின்னரே, சிங்கப்பூரை சேர்ந்த திருநங்கை சாக்‌ஷி ஹரேந்திரன், தர்மதுரை ஜீவா, அருவி அஞ்சலி என சிலரிடம் விஜய் டிவி டீல் பேசி வருகிறது என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.