Kamalhaasan : பொள்ளாச்சியில் பெண்களை குறிவைத்து நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில், கல்லூரி மாணவிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்பட 4 பேர் மீது குண்டம் சட்டம் பாய்ந்துள்ளது.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பொள்ளாச்சி விவாகரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் போராட்டங்களை ஆரம்பித்து இருப்பதால் சிக்கலாக மாறிய பொள்ளாச்சி பலாத்கார கொடூர வழக்கை இன்று மதியம் பிற்பகலில் சிபிசிஐடிக்கு மாற்றியது. எனினும் தேர்தல் சமயத்தில் அதிமுகவுக்கு சிக்கலை உருவாக்கும் எனக்கருதிய தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று காலை சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேரில் வந்து மனு கொடுத்தார். அதில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “இந்த விவாகரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை எப்படி அனுகலாம் என போலீசார் ஆலோசனை செய்து வருகின்றனர். அதுவரை ஊடகங்களும், பத்திரிக்கையாளர்களும் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குற்றவாளிகளின் புகைப்படங்களை பதிவிடாமல் இருப்பது நல்லது” என அவர் தெரிவித்தார்.