Kamal seeking support from rajini – நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு அதரவு அளிக்க வேண்டும் என கமல்ஹாசன் ரஜினியிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி விரைவில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சியின் சார்பில் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். தங்களுக்கு ரஜினி, சீமான் போன்றோர் ஆதரவு அளிக்க வேண்டும் என கமல் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், தற்போது ரஜினியிடம் கமல் மீண்டும் ஆதரவு கேட்டுள்ளார். இதுபற்றி கமல் அளித்த பேட்டியில் “எனது கட்சி அலுவலகத்துக்கு வந்த ரஜினியிடம் நீண்ட நேரம் பேசி ஆதரவு கேட்டேன். அவரும் நிச்சயம் செய்வதாக கூறினார். எனவே, மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் அவர் எங்களை ஆதரிப்பார் என எதிர்பார்க்கிறேன். அவர் யோசித்து நல்ல முடிவை எடுப்பார்” என தெரிவித்தார்.