கீர்த்தி சுரேஷூக்கு நடிப்பு வராது என்று கலாய்த்தவா்கள் எல்லாம் நடிகையர் திலகம் படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்து வருகிறார்கள். சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனா். பாகுபலி இயக்குனர் ராஜமௌலி தனது பாராட்டுதலை தெரிவித்துள்ளார். இந்நிலையில் உலக நாயகன் கமல் கீர்த்தி சுரேஷுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியாக நடித்த கீா்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து வியந்து வருகின்றனர். சாவித்திரியை நம் கண் முன்னாடி அப்படியே கொண்டு வந்திருக்கிறார் கீர்த்தி. பழம் பெரும் மறைந்த நடிகை சாவித்திரி 1950 மற்றும் 60களில் தமிழ் மற்றும் தெலுங்க மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். நடிகையர் திலகம் படமானது சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, ஆரம்பகால வாழ்க்கை, சினிமா வாழ்க்கை, ஜெமினியின் காதல், சொந்த படம் எடுத்து சொத்துக்களை இழந்தது, ஜெமினியின் துரோகம், இறுதியில் கோமா நிலையில் 46 வயதில் மிகவும் பரிதாபமாக உயிரிழந்தது அனைத்தையும் தெள்ளத் தெளிவாக காட்டிய விதம் அருமை.

சாவித்திரியாகவே வாழ்ந்த்திருக்கிறார் கீர்த்திசுரேஷ். அற்புதமான நடிப்பை வெளிகாட்டியுள்ளார் அவர். சாவித்திரியின் சிரிப்பு, அழுகை என அவரை நம் முன்னாடி கொண்டு வந்திருக்கிறார் கீர்த்தி. இந்நிலையில் உலக நாயகன் கமல் கீர்த்தி சுரேஷஸை அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது பற்றி கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், கமல்ஹாசன் அவர்களது வாழ்த்துகள் எனக்கு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றும் அவருக்கு எனது நன்றிகள் என்றும் தெரிவித்துள்ளார்.