நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன் வெற்றி கதாநாயகனாக வெள்ளித்திரையில் வலம் வந்து கொண்டிருப்பவர். சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளாரே தவிர, நிகழ்ச்சிகள் எதையும் அவர் தொகுத்து வழங்கியதில்லை. விளம்பரத்தில் கூட நடித்திருக்காதவர், கடந்த தீபாவளியன்று போத்தீஸ் நிறுவன விளம்பரத்தில் மட்டும் நடித்தார்.

இதையும் படிங்க பாஸ்-  பணத்துக்காக சண்டையிடுவதை நிறுத்துங்கள்: யாருக்கு சொல்கிறார் ஓவியா?

இந்நிலையில், தற்போது அவர் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. ஹிந்தி தொலைக்காட்சியில் மெகா ஹிட் அடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை, தமிழ் தொலைக்காட்சி ஒன்று நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதை கமல்ஹாசன் நடத்தினால் சரியாக இருக்கும் என்பதால், இதுபற்றி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க பாஸ்-  கமல் ஆண்ட்டி இந்தியன் மட்டுமல்ல… ஆண்ட்டி மனிதகுலம் – ஹெச் ராஜா ஆவேசம் !

ஆனால், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் எதுவும் வெளியாகவில்லை.