நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் திடீர் ஆலோசனை…

தன்னுடைய நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

சமீப காலமாக நடிகர் கமல்ஹாசன் தன்னுடை டிவிட்டர் பக்கத்தில் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் மற்றும் நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வந்தார். அதற்கு பல்வேறு தரப்பினர் அவரை பாராட்டி வந்தனர்.

அந்நிலையில், அவரைன் நற்பணி மன்ற சிலரை, காவல் துறையினர் கைது செய்தனர். இதற்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில், தனது நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரோடு கமல்ஹாசன் திடீர் ஆலோசனை நடத்தினார். அதில் என்ன முடிவெடுக்கப்பட்டது என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.