பாகுபலி பட பிரச்சனை: கமலின் பகுத்தறிவு பாராட்டும், சத்யராஜின் நன்றியும்

‘பாகுபலி 2’ படத்தின் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நேற்று நடிகர் சத்யராஜ், கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட கன்னட அமைப்புகள் படத்திற்கு எதிரான போராட்டத்தை ரத்து செய்தன.

இந்த நிலையில் சத்யராஜ் தனது அறிக்கையில், ‘ஒரு நடிகனாக இருப்பதைவிட, எந்தவித மூட நம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும்தான் எனக்கு பெருமை, மகிழ்ச்சி என்று தெரிவித்திருந்தார்.

சத்யராஜின் இந்த கருத்துக்கு கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். அவர் தனது டுவிட்டரில் ‘இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பகுத்தறிவை பின்பற்றிய சத்யராஜூக்கு வாழ்த்துக்கள் என்று கூறிய கமல், ‘மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனிதன்’ என்று விருமாண்டி பட வசனத்தை ஞாபகப்படுத்தினார்.

கமலின் இந்த பாராட்டுக்கு சத்யராஜ் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.