கடந்த 8ம் தேதி நடிகர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மூன்றாவது மாடியில் உள்ள பிரிட்ஜ் அதிக வெப்பமானதால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

ஆழ்வார் பேட்டை இல்லத்தில் கமல்ஹாசன் ஒரு நூலகம் அமைத்திருந்தார். இந்த தீ விபத்தில் அந்த நூலகத்தில் உள்ள 20 சதவீத புத்தகங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டதாம். இது குறித்து அவர் கூறியபோது, பொருளாதார பாதிப்புகளைக் கூட தாங்கிக்கொள்ளலாம். ஆனால்  20 சதவிகித புத்தகங்கள் எரிந்து போனதுதான் தாங்க முடியவில்லை.  எரிந்த  பல புத்தகங்கள் சம்மந்தப்பட்ட எழுத்தாளர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்தவை. இதில் சில எழுத்தாளர்கள் இப்போது உயிரோடு இல்லை.  இழந்து போன அவற்றை எந்த பணமும் திருப்பி தந்துவிடாது என்று வேதனையுடன் கூறினார்.