ரூ.400 கோடி பட்ஜெட் படத்தில் கமல்ஹாசன் – கலைப்புலி தாணு

உலக நாயகன் கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, ரவீனா தண்டன் உள்பட பலர் நடித்த திரைப்படம் ‘ஆளவந்தான்’. இந்த படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்தார். கடந்த 2001ஆம் ஆண்டிலேயே இந்த படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தின் பட்ஜெட் இன்றைய மதிப்பில் ரூ.400 கோடி என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் அப்போது பத்திரிகையாளர்களால் பாராட்டப்பட்டாலும் பாமர ரசிகர்கள் இந்த படத்தை ரசிக்கவில்லை. எனவே இந்த படம் படுதோல்வி அடைந்தது.

ஆனால் 15 வருடங்களுக்கு முன்பே நவீன டெக்னாலஜி, சூப்பர் கிராபிக்ஸ், மோஷம் கேப்ட்சர் என டெக்னிக்கலாக அசத்திய படம் ஆளவந்தான்

இந்த படம் தற்போது டிஜிட்டல்மயமாகி வருகிறது. விரைவில் டிஜிட்டல் பணியை முடித்துவிட்டு வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை திரையிட திட்டமிட்டுள்ளதால் தாணு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.