ஜெயலலிதா இருக்கும்போதே கட்டம் கட்டபட்டவன் நான்: கமல்ஹாசன்

கமல்ஹாசன் சமீபத்ய நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஆளும் கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது என்றே கூறலாம். சமீபத்ய அரசியல் தாக்குதல்களால் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் கூறும்போது,   நான் வைக்கும் விமர்சனங்கள் பொதுவானவையே. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தனிப்பட்ட முறையில் நான் குறி வைக்கப்பட்டேன். அது ஏன் என்பது இதுவரை எனக்கு தெரியவில்லை.

நான் மனதில் பட்டதை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நாடு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதில் கருத்து கூற எனக்கு உரிமை உண்டு. அது பற்றி யார்  விமர்சித்தாலும் கவலை இல்லை.  ரஜினி கட்சி தொடங்கினாலும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவேன் என்றார்.