திரையுலகில் நடிகர் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் அரசியலுக்கு வருவதும் உறுதியாகியுள்ளது.இதையடுத்து அரசியல் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று அமெரிக்காவில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

இந்த வருடம் எனது அரசியல் பயணத்தை கிராமங்களில் இருந்து துவங்குகிறேன். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அந்த கிராமத்தை முன்னோடி கிராமங்களாக மாற்றுவோம். ஓட்டுக்கு நாம் பணம் வாங்கினால், அரசியல்வாதிகள் ஊழல் செய்யும்போது கேள்வி கேட்க முடியாது. அரசியல் களத்தில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன். எனக்கும் ரஜினிக்கும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டும்தான். நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். ஆனால் அரசியல் களம் என்பது வேறு. அரசியலில் வித்தியாசப்பட்டு இருக்கவே விரும்புகிறேன் என்று பேசினார்.