நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் தங்களது அரசியல் பயணத்தை உறுதி செய்துள்ளது மக்கள் அனைவரும் அறிந்ததே. இதில் ரஜினியை விட கமல்ஹாசனின் அரசியல் செயல்பாடுகள் மிக வேகமாக சென்றுகொண்டிருக்கிறது. மக்களை நேரில் சந்திப்பது மட்டுமின்றி மக்கள் பிரசனைகளுக்கு குரல் கொடுப்பது என அனைத்திலும் கமல்ஹாசன் ஈடுபட்டுவருகிறார். சமீபத்தில் தனது மய்யம் நிரலியை வெளியிட்டார். அதில் பொதுமக்கள் தங்களது பொதுபிரச்சனைகள பதிவு செய்யலாம் என்றும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  நீ செத்திருப்பனு நெனச்சோம், நீ இன்னும் சாகலியா?-வேதனையுடன் கூறிய ஜூலி

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனகாபுத்தூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர், அங்கிருக்கும் ஆற்றில் கலந்து நீர் மாசு ஏற்படுத்துகிறது என்று மய்யம் விசில் செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யம் பெருமளவு வேலை வாய்ப்புகள் வழங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல. ஆனால் வணிகம் மற்றும் வேலை வாய்ப்பின் பெயரில் நிகழும் கொடுமையான மாசுகளுக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்: ரசிகர்களிடம் பேசிய ரஜினி

அரசு இது போன்ற பொறுப்பற்ற மாசுக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அனகாபுத்தூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை தேவை! தொழில்கள் மெல்லச் சாகக்கூடாது… மக்களும் தான்! என தெரிவித்துள்ளார்.