நீட் தேர்வு மையங்களை கேரளம் மற்றும் ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் அமைத்திருப்பது ஏழை எளிய தமிழக மாணவா்களுக்கு இழக்கப்படும் அநீதி என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

மருத்துவ படிப்பில் சேருவதற்கு மாணவர்களுக்கான நீட் தேர்வு வரும் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மருத்துவ மாணவா் சேர்க்கைக்கான நீட் தேர்வை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் எழுத இருக்கின்றனா். நீட் தேர்வுக்கான மையங்கள் தமிழக மாணவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தானில் ஒதுக்கீடு செய்துள்ளனர்.

நீட் தேர்வு மையங்கள் வெளி மாநிலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சி.பி.எஸ்.இ நிர்வாகம் தேர்வு மையங்கள் கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டதால் அதனை மாற்ற செய்ய முடியாது என்று அறிவித்தது. இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் வெளி மாநிலங்களில் நீட்தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டால் மாணவா்களுக்கு பொருளாதார ரீதியாகவும் மனதளவிலும் பாதிப்பு ஏற்படும். எனவே கூடுதலான நீட் தேர்வு மையங்களை ஒதுக்கி தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

தமிழகத்தில் தேர்வு மையங்களை அமைக்க போதிய அவகாசம் இல்லாத காரணத்தால் தற்போது வெளி மாநிலங்களில் ஒதுக்கீடு செய்துள்ளது என சி.பி.எஸ்.இ நிர்வாம் பதிலளித்து. வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அவா்களின் கோரிக்கை ஏற்று உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்கீட செய்ய மறுப்பு தெரிவித்து விட்டது. அதனால் தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையங்களில் தேர்வு எழுத வேண்டும் என்றது. தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதி மன்றம் நிராகரித்தது. இந்த தீர்ப்பை கேட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நீட் தேர்வு மையம் பற்றி மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டரில், இந்த டிஜிட்டல் இணையதள உலகத்தில் ஏழைத் தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானிற்கும் நீட் தேர்வு எழுத அலைக்கழிப்பது அநீதி. இங்கிருந்தே எழுதலாமே? அதற்கு வழி செய்யட்டும் அரசும் ஆணையும் என ட்வீட் செய்துள்ளார்.