தென்னிந்திய திரையுலகில் கமலஹாசனும் மோகன்லாலும் இருபெரும்புள்ளிகள். இவர்களின் நடிப்பைபற்றி நாம்  விளக்கவேண்டும் என்கிற அவசியமே இல்லை . எந்த திரைப்படமாக இருந்தாலும்,  அந்த கதாபாத்திரமாகவே  மாறி மக்களை கவர்வதில் இருவரும் வல்லவர்கள்.

கமல்ஹாசன் மோகன்லால் கூட்டணியில் ஏற்கனவே ‘உன்னைபோல்ஒருவன்’  திரைப்படம் மிகபெரிய  வெற்றியை அடைந்தது. அதன்பிறகு மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளிவந்த ‘திரிஷ்யம்’ படத்தை தமிழியில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் இயக்கியபோது  மோகன்லால் கதாபாத்திரத்தில் நடித்தது கமலஹாசன்தான் .திரைபடத்தில் ‘சுயம்புலிங்கம்’ என்று கமலஹாசனுக்கு பெயர்  சூட்டியதும் மோகன்லால்தான். இந்த திரைப்படமும் கமலஹாசனுக்கு  வெற்றியை தந்தது.

தற்போது இருவரும் சேர்ந்து ஹிந்தியில் வெளியான “c ‘ திரைப்படத்தை  தமிழ் மற்றும் மலையாள மொழிகளில்  எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது. பரேஷ்ராவல் கதாபாத்திரத்தில் கமலும், விஷ்ணு அவரதாரமாக நடித்த அக்ஷய்குமார் கதாபாத்திரத்தில் மோகன்லாலும் நடிக்கவிருக்கின்றனர்.

மோகன்லாலின் ‘வில்லின்’ திரைப்படம்வெளியானதும், கமல்ஹாசன் கால்ஷீட் கிடைத்தவுடன் இப்படத்திற்கான வேலைகள் தொடங்கும் என சினிமா வட்டாரம் தெரிவிக்கின்றது.இதன்பிறகு மோகன்லால் ஆயிரம்கோடி ரூபாய் செலவில் உருவாகும் மஹாபாரதம் திரைப்படத்திலும் கமலஹாசனுக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்குஎன்று செய்திகள் வந்துள்ளன. கமல் ரசிகர்களுக்குர டபுள் தாமாகாதான் !