கமல்ஹாசனின் புரியாத புதிர் டுவீட்

12:59 மணி

நடிகர் கமல்ஹாசன் எல்லோருக்கும் புரியும் வகையில் இரு கருத்தை சொல்லிவிட்டார் என்றால் அதுதான் உலக சாதனை. அவரது குணா, குருதிப்புனல் படங்கள் இன்னும் புரியாத புதிராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்றிரவு தனது டுவிட்டரில் ஒரு கருத்தை அவர் பதிவு செய்துள்ளார். ‘முந்திச்சொல்வதை விட, முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை; பின்பற்றுவோர் தொண்டரல்லர் மக்கள், குடியரசு புரிந்ததா? என்று பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டில் புரிந்ததா? என்று கேட்டுள்ளதில் இருந்தே பலருக்கு புரிந்திருக்காது என்பது உறுதியாகின்றது.

அந்த டுவீட்டின் முதல் வார்த்தையான டாக்டர் என்பது யாரை குறிக்கின்றது என்பதே குழப்பமாக உள்ளது. பாமக டாக்டர் அன்புமணியா, டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜனா?, டாக்டர் அப்துல்கலாமா என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து டுவிட்டரில் பதிவு செய்து வந்தாலும் இன்னும் குழப்பம் தீர்ந்தபாடில்லை. தயவுசெய்து புரியும்படி கருத்தை வெளிப்படுத்த கமல்ஹாசனுக்கு அனைவரின் சார்பில் வேண்டுகோள் வைக்கின்றோம்

(Visited 6 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393