உலக நாயகன் கமல் ஹாசன் பிக்பாஸ் சீசன் 2 தமிழ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் நிலையில் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் பாடல்களை அந்த நிகழ்ச்சியிலேயே வெளியிட இருப்பதாகவும் அதிராகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கமல் ஹாசன் நடிப்பில் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்து வரும் விஸ்வரூபம் திரைப்படத்தின் பாடல்களை நாளை ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட இருப்பதாகச் சனிக்கிழமை நிகழ்ச்சியின் இறுதியில் தெரிவித்துள்ளார்.

பின்னர்ச் சனிக்கிழமை இரவு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற விஸ்வரூபம் திரைபடத்தின் பாடல் வெளியீட்டு ப்ரோமோவில் ஸ்ருதி ஹாசன் மற்றும் கமல் ஹாசன் பாடுவதும் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்குக் கிப்ரான் இசை அமைத்துள்ளார். ராஜ்கமல் பிளிம்ஸ் சார்பில் கமல் மற்றும் ஆஸ்கார் ரவிசந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.