பிரபல நடிகரை கத்தியால் குத்திய மர்ம நபர்

05:56 மணி

கா்நாடகாவில் நடிகா் குரு ஜக்கேஷை மா்ம நபா் ஒருவா் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய விவகாரம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட நடிகரும் அரசியல்வாதிவான ஜக்கேஷின் மகன் குரு ஜக்கேஷ். இவா் கன்னடப்படங்களில் நடித்துள்ளாா். தமிழில் இயக்குநா் செல்வராகவன் இயக்கதில் வெளிவந்த 7ஜி ரெயின்போ காலனி படம் கன்னட ரீமேக்கில் நடித்தவா் குரு. இதன் மூலம் ரசிகா்களிடையே மிகவும் பிரபலமானாா்.

கன்னட நடிகா் குரு பெங்களூாில் வசித்து வருகிறாா். இவா் தன்னுடைய குழந்தைகளை காாில் அழைத்துச் சென்று பள்ளியில் விடுவதற்காக ஆா்.டி.நகருக்கு இன்று காலை சென்றுள்ளாா். பள்ளியில் குழந்தைகளை விட்டுட்டு வரும் போது ஒரு நபா் இருசக்கர வாகனத்தை தாறுமாறாக ஒட்டியபடி வந்துள்ளாா். இதைப் பாா்த்து கோபமடைந்த குரு, அந்த நபாிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளாா்.

பிரச்சனை முற்றியதால், அந்த நபா் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குருவின் காலின் தொடைப்பகுதியில் குத்திவிட்டு அங்கிட்டு தப்பியோடிவிட்டாா். காயமடைந்த கன்னட நடிகா் குரு, ஒரு தனியாா் ஆஸ்பத்திாியில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று அவாின் தந்தையும் அரசியல்வாதியுமான ஜக்கேஷ் தொிவித்துள்ளாா்.

(Visited 14 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com