காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அவர்க: சற்றுமுன் மூச்சுத்திணறல் காரணமாக காலமானார்.

ஜெயேந்திரர் ஏற்கனவே இரு மாதங்களுக்கு முன்பு மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலைஇல் இன்று காலை மீண்டும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சங்கரமடம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சையின் பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிஅலையில் காஞ்சிபுரம் மருத்துவமனையில் மரணம் அடைந்த காஞ்சி சங்கரரின் உடல் தற்போது மருத்துவமனையில் இருந்து காஞ்சி மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு குறித்த அறிவிப்புகள் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.